கவிதையே தெரியுமா?


"கவிதையே தெரியுமா?
என் மனதில் அவள் நினைவின்
சிறுபகுதியே உன் வருகை!!"

:-)

"மஞ்சுவிரட்டு காளையின் கொம்புகளால்
என்னை பதம்பார்க்க இயலவில்லை-பெண்ணே!
உன் புருவங்களின் சொருகலிலே வீழ்ந்துவிட்டேன்!"

"பெண்ணே! உன் கண்களால் கொலையுண்டவன் இன்று
காதலெனும் சொர்க்கவாசலிலே காத்திருக்கிறேன்.
இதயமெனும் சொர்க்கவாசல் திறப்பாயா!
இல்லை மறுப்பாயா?"
________

"கண்கள் நான்கும் காதல் கொண்டு
கதை நூறு பேசுமே!
கள்ளத்தனம் இல்லா நெஞ்சும்
கண நேரம் கூசுமே!!"
__________________

"குறிஞ்சிப் பூ பூப்பதைப் பார்ப்பது
அறிதாம் பெண்ணே!
நான் தான் தினம் தினம்
காண்கின்றேனே உன்னை!!"
____________

"போர்களத்தில் புறமுதுகிடாமல்
முன்தொடர்ந்து செல்பவன்-என்னை
உன் புறமுதுகுகாட்டி பின்தொடரச் செய்தாய்!"
__________________

"மனச்சிறையில் என்னை அடைத்துவிட்டாள்,
அவளை காதலித்த குற்றத்திற்காக!!"

"பாய்வது மின்னல் என்று தெரிந்தும் எதிர்க்கின்றேன்,
பெண்ணே! உன் வருகையின்போது."

"1ரு கலைஞன் இன்று கவிஞனாகிறேன்-பெண்ணே!
கன்னி உன்னை கண்டதினாலே!!"

"காளியைக் கண்டேண் கவிதை எழுதினேன்
-> ஊருக்குள் கலவரம்!
கன்னியைக் கண்டேன் கவிதை எழுதினேன்
->உள்ளுக்குள் கலவரம்!!"

"என் கவிதையே! ஆணவம் கொள்ளாதே.
அழகாய் இருப்பதாய் எண்ணி
அந்த கன்னியின் பிரதிபலிப்புதான் நீ!!
எண்ணிப்பார் அவள் எத்துனை பேரழகி என்று!!!"


பூவே! உன்னை நேசிக்கிறேன்,
ரகசியமாக! - ஏனென்றால்
என் காதலி பொறாமை கொள்வாள்!!!


"மலரே! உன்னை ரசிப்பதற்கே வந்தேன்,
பறிப்பதற்கல்ல!!!"
Download As PDF